செய்திகள் :

ITR Filing 2025: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்னும் 15 நாள்களே உள்ளன; மீறினால்..?

post image

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய, இன்று முதல் வெறும் 15 நாள்களே உள்ளன. ஆம்... வருமான வரிக் கணக்க தாக்கல் செய்ய வரும் செப்டம்பர் 15-ம் தேதியே கடைசி தேதி.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது இயல்பான ஒன்று.

INCOME TAX | வரிக் கணக்குத் தாக்கல்
INCOME TAX | வரிக் கணக்குத் தாக்கல்

நீட்டிப்பிற்கு காரணம் என்ன?

இந்த ஆண்டு புதிதாக வருமான வரிக் கணக்குக் தாக்கல் படிவங்கள் எளிமையாக்கப் பட்டிருக்கின்றன. அந்த இணையதளத்திலும் ஒரு சில அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், வருமான வரிப் படிவங்களும் தாமதமாகவே வெளியிடப் பட்டன. இதையெல்லாம் கணக்கில் வைத்து தான் வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது.

கடைசி தேதிக்குள் செய்யவில்லை என்றால்...

பிரிவு 234A-ன் கீழ், கடைசி தேதிக்கு பின், வருமான வரி தாக்கல் செய்தால், அதில் வருமான வரி நிலுவை இருந்தால், தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கு வருமான வரி நிலுவைக்கு 1 சதவிகிதம் வட்டி கட்ட வேண்டும்.

பிரிவு 234F-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்ய ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருப்பவர்கள் ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும்.

ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருந்தால், ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

10-ம் ஆண்டில் `கடல் ஓசை FM': சாதித்தது என்ன? - நிறுவனர் ஆம்ஸ்ட்ராங், நேயர்களின் அனுபவ பகிர்வு

பாம்பன் `கடல் ஓசை FM' ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இயங்கும் `கடல் ஓசை FM' பத்தாம் ஆண்டினை இன்று கொண்டாடி வரும் சமயத்தில் அவர்களை சந்தித்தோம். அதன் தலைமைச் செயலாளர் ஆம்ஸ்ட்ராங் நம்மிடம் பேசும்போது, "நா... மேலும் பார்க்க