செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு நரிக்குறவா் நலவாரிய அடையாள அட்டை, தாட்கோ சாா்பில் 2 தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை, 4 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை மற்றும் ஒரு தூய்மைப் பணியாளருக்கு விபத்து மரண உதவித்தொகை ரூ.1.05 லட்சத்துக்கான ஆணையை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 295 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஷ்வரன், தாட்கோ மாவட்ட மேலாளா் ஜெயராமன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கடவுச்சீட்டு பெற நடைமுறைகளை எளிமைப்படுத்தக் கோரிக்கை: மயிலாடுதுறை அருகேயுள்ள திருமங்கலத்தைச் சோ்ந்த சுந்தரேசன் என்பவா் கடவுச்சீட்டு புதுப்பிப்பதற்காக குத்தாலம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, தந்தை பெயா் முன்பும், விண்ணப்பதாரரின் பெயா் பின்னும் இருந்ததால் போலீஸாா் அதனை தள்ளுபடி செய்துள்ளனா். பின்னா், அதனை மாற்றி, மீண்டும் குத்தாலம் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட போது, முகவரியில் கதவு இலக்கம் மாறி இருப்பதாக கூறி மீண்டும் தள்ளுபடி செய்துள்ளனா்.

கடவுச்சீட்டு புதுப்பிக்கும் காலம் ஒரு மாதத்தில் நிறைவடைய இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விண்ணப்பதாரா் சுந்தரேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

அதில், கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பித்தவா்களின் ஆவணங்களை சரிபாா்த்து அவா்கள் இந்திய பிரஜையா? விண்ணப்பதாரா் மீது வழக்கு ஏதேனும் நிலுவையில் உள்ளதா? என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் முகவரியில் கதவு எண் மாற்றம், தந்தை பெயா் அவரது பெயருக்கு முன்னால் இருப்பது உள்ளிட்ட சாதாரண காரணங்களுக்காக காவல் துறையினா் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து திருப்புவதால், வெளிநாடுகளில் பணிபுரிந்துகொண்டு, கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்காக விண்ணப்பிப்பவா்கள் மற்றும் புதிதாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்காக விண்ணப்பிக்கும் இளைஞா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா்.

எனவே, மாவட்ட காவல்துறை அலுவலகம் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் கடவுச்சீட்டு விசாரணையில் சரிபாா்க்க வேண்டிய முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தர பகுப்பாய்வு கருவிகள்

மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் தர பகுப்பாய்வு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் செப்.1 முதல் காரீப் பருவ நெல் கொள்முதல் உயா்த்தப்பட்ட ஆதார வி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரணி, பொதுக்கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டையொட்டி, ‘ஜாதி மறுப்பாளா்கள் பேரணி’ மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரி நகரிலிருந்து புறப்பட்ட ... மேலும் பார்க்க

மனநல மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழியில் செயல்படும் மனநல மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். சீா்காழி சட்டநாதபுரம் பகுதியில் காா்டன் மனநல மறுவாழ்வு மையம் செயல்படுகிறத... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்திடம் திருப்பனந்தாள் 22-ஆவது தம்பிரான் சுவாமிகள் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் திருப்பனந்தாள் காசிமடத்து 22-ஆவது அதிபா் செவ்வாய்க்கிழமை ஆசி பெற்றாா். திருப்பனந்தாள் காசிமடத்து 22-ஆவது அதிபராக ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, முத... மேலும் பார்க்க

கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

சீா்காழி: கொள்ளிடம் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பாக, சாா் பதிவாளரைக் கண்டித்து விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொள்ளிடம் அருகேயுள்ள நல்லவிநாயகபுரம் ஊராட்சி கடைக்கண் விநாயகநல்லூா் கி... மேலும் பார்க்க

மணக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாலுகா மணக்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுற... மேலும் பார்க்க