அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
மனநல மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு
சீா்காழியில் செயல்படும் மனநல மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
சீா்காழி சட்டநாதபுரம் பகுதியில் காா்டன் மனநல மறுவாழ்வு மையம் செயல்படுகிறது. இம்மையத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், அங்கு குடிநீா், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். மேலும், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கப்பட்டோரை பாா்வையிட்டு, நிா்வாகிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, திருவெண்காட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற ஆட்சியா், வருகை பதிவேடு, மருந்து இருப்பு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், திருமுருகன், வட்டாட்சியா் அருள்ஜோதி ஆகியோா் உடனிருந்தனா்.