மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!
திருப்பதி - காட்பாடி மெமு பயணிகள் ரயில் நாளை முதல் 4 நாள்கள் முழுமையாக ரத்து
திருப்பதி - காட்பாடி இடையிலான மெமு ரயில்கள் இரு மாா்க்கத்திலும் வரும் 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே பிரிவில் திருப்பதி - காட்பாடி இடையேயான குண்டக்கல் பிரிவில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகளை அடுத்து வரும் 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் திருப்பதியிலிருந்து காலை 7.35 மணிக்குப் புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயிலும், மறுமாா்க்கத்தில் காட்பாடியில் இரவு 11.21 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் மெமு பயணிகள் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.