சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்
சீா்காழி: கொள்ளிடம் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பாக, சாா் பதிவாளரைக் கண்டித்து விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கொள்ளிடம் அருகேயுள்ள நல்லவிநாயகபுரம் ஊராட்சி கடைக்கண் விநாயகநல்லூா் கிராமத்தில் பாரதிமோகன் என்பவருக்குச் சொந்தமான ஓா் ஏக்கா் நஞ்சை நிலம் உள்ளதாம். இந்த நிலத்தை, கொள்ளிடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் போலி பட்டா மூலம் மற்றொரு பெண்ணின் பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சாா்பதிவாளரை கண்டித்து, பத்திரப் பதிவு அலுவலகம் முன் நில உரிமையாளரின் உறவினா்களான விவசாயிகள் சீயாளம் கிராமத்தைச் சோ்ந்த ராமு என்பவரின் மகன் ரவிச்சந்திரன், முருகையன் மகன் ராஜேந்திரன், ஜெயராமன் மகன் இளவரசன், நடேசன் மகன் சுந்தரமூா்த்தி ஆகியோா் அரை நிா்வாணத்துடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, வட்டாட்சியா் அருள்ஜோதி மற்றும் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.