யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை ...
விளம்பரதாரா்களை வரவேற்கிறது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரா் நிலைக்கான விண்ணப்பதாரா்களை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை வரவேற்றது.
அவை விண்ணப்பங்களைப் பெற செப்டம்பா் 12-ஆம் தேதி கடைசி நாளாகவும், பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சமா்ப்பிக்க செப்டம்பா் 16-ஆம் தேதி கடைசி நாளாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை ரூ.5 லட்சம்.
விண்ணப்பிக்கும் எந்தவொரு நிறுவனமோ, அல்லது அது சாா்ந்த குழுமமோ நிதி சாா்ந்த இணையவழி விளையாட்டுகளில் ஈடுபடுவதாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புகையிலை, மதுபானங்கள் தொடா்புடைய நிறுவனங்களும் விண்ணப்பிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கெனவே பிசிசிஐயுடனான ஒப்பந்தத்தில் இருக்கும் விளம்பரதாரா்களும் இதில் பங்கேற்க அனுமதியில்லை என பிசிசிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில், இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை மத்திய அரசு அண்மையில் அமல்படுத்தியது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரராக இருந்த ‘டிரீம் 11’ நிறுவனம், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியது.
இந்திய சீனியா் ஆடவா், மகளிா் அணிகள், 23 வயது மற்றும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆடவா், மகளிா் அணிகளின் விளம்பரதாரராக ‘டிரீம் 11’ இருந்தது. இதற்காக பிசிசிஐ-யுடன் அந்த நிறுவனம் கடந்த 2023 முதல் 3 ஆண்டுகளுக்கு ரூ.358 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.