செய்திகள் :

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்வு: "முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்" - சபாநாயகர் அப்பாவு

post image

'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' எனச் செப்டம்பர் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், 'அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்' எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள் என ஆசிரியர்கள் கூட்டணி சங்கங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர். இது பணியில் இருக்கும் ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு, "ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒருபோதும் இடையூறு செய்யாது. முடிந்தவரை அரசு ஆசிரியர்களுக்கு உதவிதான் செய்யும். முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் 'ஆசிரியர்களை அரசு கைவிடாது' என்று உறுதியளித்திருக்கிறார். கல்வி அமைச்சர், முதல்வர் கலந்து பேசி நல்ல தீர்வை ஆசிரியர்களுக்கு வழங்குவார்கள்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சென்னை: வடிகால் தொட்டியில் விழுந்த பெண்; சடலமாக மீட்ட காவல்துறை - என்ன நடந்தது?

சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, வீரபத்திரன் கோயில் தெருவில் உள்ள ஒரு வண்டல் சேகரிப்பு தொட்டியில் (silt catch pit) பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று காலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.... மேலும் பார்க்க

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த அவலமானது இந்தூரில் உள்ள மாந... மேலும் பார்க்க

"விடுவிக்கப்படும் வரை சிறையிலிருப்பதே நல்லது" - எதிர்க்கும் அரசு; உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.இதில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பின்னர், இந்தக் ... மேலும் பார்க்க

நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்லூரி மாணவிகள்

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் 'பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என வருந்துகிறார்கள் நெல்லை கல்... மேலும் பார்க்க

``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

கச்சத்தீவுபாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை ... மேலும் பார்க்க

ஆந்திரா: "இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்" - அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்​திர​பாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒரு​மன​தாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.சந்திரபாபு நாயுடு, முதன்முத... மேலும் பார்க்க