செய்திகள் :

"விடுவிக்கப்படும் வரை சிறையிலிருப்பதே நல்லது" - எதிர்க்கும் அரசு; உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி!

post image

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.

இதில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பின்னர், இந்தக் கலவரம் திட்டமிட்ட சதி என்றும், அதைத் திட்டமிட்டது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர் சங்க முன்னாள் தலைவர் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட 9 பேர் என்றும் அவர்கள் அனைவரையும் அதே ஆண்டு செப்டம்பரில் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைதுசெய்தனர்.

உமர் காலித், ஷர்ஜீல் இமாம்
உமர் காலித், ஷர்ஜீல் இமாம்

அன்று முதல் அவர்கள் 9 பேரும் சுமார் ஐந்தாண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். வழக்கும் ஐந்தாண்டுகளாக விசாரணையில் மட்டுமே இருக்கிறது.

இதில், 9 பேரின் தரப்பிலிருந்தும் பலமுறை ஜாமீன் கோரப்பட்டும் அது நீதிமன்றத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், உமர் காலித் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் கோரிக்கை மேல்முறையீட்டு மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நவீன் சாவ்லா, ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்தக் கலவரம் நன்கு திட்டமிடப்பட்ட சதி. நாட்டுக்கு எதிராக நீங்கள் ஏதாவது செய்தால், விடுவிக்கப்படும் வரை நீங்கள் சிறையில் இருப்பது நல்லது" என்று வாதிட்டார்.

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

மறுபக்கம், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர், தங்களிடமிருந்து குற்றப் பொருள்களோ அல்லது பணமோ மீட்கப்படவில்லை என்றும், போலீஸார் குற்றம்சாட்டியது போல் எந்த வகையான சதித்திட்டத்திலும் தாங்கள் பங்கேற்கவில்லை என்றும், தங்களின் பேச்சுக்கள் மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அமைதியின்மைக்கு வழிவகுக்கவில்லை என்றும் வாதத்தின்போது கூறினர்.

இருப்பினும், நீதிமன்ற அமர்வு 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

அதேசமயம், இந்த 9 பேர் சார்பில் மனு தாக்கல் செய்த சமூக ஆர்வலர்கள் தரப்பு வழக்கறிஞர், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.

நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்லூரி மாணவிகள்

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் 'பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என வருந்துகிறார்கள் நெல்லை கல்... மேலும் பார்க்க

``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

கச்சத்தீவுபாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை ... மேலும் பார்க்க

ஆந்திரா: "இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்" - அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்​திர​பாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒரு​மன​தாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.சந்திரபாபு நாயுடு, முதன்முத... மேலும் பார்க்க

Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான ம... மேலும் பார்க்க

பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம் ஈர்க்க காரணம் என்ன?

சமீபத்திய SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஹோங்க்சி L5 மாடல் காரில் பயணம் செய்தது பேசுபொருளாகி கவனம் ஈர்த்துள்ளது.இந்தக் கார் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் உயர்மட்ட த... மேலும் பார்க்க

TNPSC: "சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?" - பாமக அன்புமணி காட்டம்!

இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள... மேலும் பார்க்க