தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்
ஒட்டன்சத்திரம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த வெரியப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி வேலுச்சாமி (55). இவரது மனைவி பரிபூரணம் (47). இவா்களுக்கு காளிமுத்து (23) என்ற மகன் உள்ளாா். வேலுச்சாமி குடும்பச் செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடன் கொடுத்தவா்கள் அதைக் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், மனமுடைந்த வேலுச்சாமி, பரிபூரணம் இருவரும் வீட்டில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.
இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].