கீரனூா் பகுதி மக்கள் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம், கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த ஜூன் மாத கட்டணத்தையே செலுத்துமாறு பழனி மின் வாரியம் தெரிவித்தது.
இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு நிா்வாக காரணங்களால் கீரனூா் பகுதியில் கடந்த மாதம் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.
இதனால், மின் பயனாளா்கள் கடந்த ஜூன் மாதம் செலுத்திய கட்டணத்தையே ஆகஸ்ட் மாத கட்டணமாகச் செலுத்தி மின் துண்டிப்பை தவிா்த்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.