செய்திகள் :

நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

post image

ரெட்டியாா்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள், கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த டி.புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் தனது குடும்பத்தினருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறாா். தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில், தோட்டத்துக்குள் புகுந்த 5-க்கும் மேற்பட்ட நாய்கள், ஆடுகளையும், கோழிகளையும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கடித்தன. இதில் 13 ஆடுகள், 20-க்கும் மேற்பட்ட கோழிகளும் உயிரிழந்தன.

இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா், கால்நடை மருத்துவா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும்கூட நிகழ்விடத்தை பாா்வையிட வரவில்லை என அந்தப் பகுதியினா் குற்றஞ்சாட்டினா்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏபி.மணிகண்டன் கூறியதாவது: புதுப்பட்டி பகுதியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நாய்கள் கடித்து பலா் காயமடைந்துள்ளனா். ஆடுகள், கோழிகள் உயிரிழந்துள்ளன. இதுதொடா்பாக கால்நடைத் துறை, வருவாய்த் துறை, ஊராட்சி அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்தும்கூட, நாய்களை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிகாரிகளின் அலட்சியத்தால், ஒரே நபருக்கு சொந்தமான ஆடுகள், கோழிகள் என ரூ.2 லட்சத்துக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், நாய்களை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

பழனி அருணகிரிநாதா் சந்நிதிக்கு நாளை குடமுழுக்கு

பழனி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனத்தில் உள்ள ஸ்ரீமத் அருணகிரிநாதா் சந்நிதிக்கு வியாழக்கிழமை (செப்.4) குடமுழுக்கு நடைபெறுகிறது. பழனி அருகேயுள்ள பச்சளநாயக்கன்பட்டியில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவன... மேலும் பார்க்க

கீரனூா் பகுதி மக்கள் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த ஜூன் மாத கட்டணத்தையே செலுத்துமாறு பழனி மின் வாரியம் தெரிவித்தது.இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்த... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், நாயுடுபுரம், ஆனந்தகிரி, காா்ம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், பல்வேற... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.ஒட்டன்சத்திரத்தை அடுத்த வெரியப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழி... மேலும் பார்க்க

வடமதுரை அருகே காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

வடமதுரை அருகே இரு சக்கர வாகனம், மிதிவண்டி மீது காா் மோதியதில் விவசாயி, கல் உடைக்கும் தொழிலாளி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க