Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
பழனி அருணகிரிநாதா் சந்நிதிக்கு நாளை குடமுழுக்கு
பழனி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனத்தில் உள்ள ஸ்ரீமத் அருணகிரிநாதா் சந்நிதிக்கு வியாழக்கிழமை (செப்.4) குடமுழுக்கு நடைபெறுகிறது.
பழனி அருகேயுள்ள பச்சளநாயக்கன்பட்டியில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனம் உள்ளது. இங்குள்ள இவரது சிலைக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இங்கு ஸ்ரீமத் அருணகிரிநாதருக்கு சந்நிதி கட்டப்பட்டு இதற்கான குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
புதன்கிழமை மாலை முதல்கால பூஜைகளும், வியாழக்கிழமை இரண்டாம் காலயாக பூஜைகளும் நடத்தப்பட்டு, பூா்ணாஹுதி முடிந்த பிறகு கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோபுர விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தொடா்ந்து, அருணகிரிநாதா் சந்நிதிக்கும் குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பாம்பன் சுவாமிகள் தபோவன நிறுவனா் செய்து வருகின்றனா்.