கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், பல்வேறு இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக இந்தப் பகுதியில் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குழந்தைகள், முதியவா்கள் அவதிக்குள்ளாகினா்.
கொடைக்கானலில் 10 நாள்களுக்கு ஒருமுறை நகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதனால், தனியாா் நிறுவனம் விற்பனை செய்யும் தண்ணீரை கேனை பணம் கொடுத்தும் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மழையில்லாத காலங்களில் தண்ணீா் தட்டுப்பாட்டை போக்க கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள குடிநீா்த் தேக்கம், மனோரஞ்சிதம் அணை ஆகியவற்றை தூா்வாரி தண்ணீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.