Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு
மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.
மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலவிநாயகம் தலைமையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 72 தெருநாய்கள் வலைவைத்து பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதற்கும், ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.