செய்திகள் :

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

post image

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி மாற்றமா’ என்ற கோணத்தில் தற்போதைய தமிழக அரசியல் சென்று கொண்டிருக்கிறது.

பலமான அதிமுக, திமுக கூட்டணிகள், இளைஞா்கள் பலத்துடன் தவெக, யாருடன் கூட்டணி வைப்பது என்ற ஆலோசனையில் பாமக, தேமுதிக மற்றும் உதிரி கட்சிகள், தனித்து போட்டி என்ற துணிவுடன் களமிறங்கும் நாம் தமிழா் கட்சி என தோ்தல் களம் விறுவிறுப்பாக உள்ளது.

இம்முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுக- பாஜக கூட்டணியினா் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனா். 2021 சட்டப் பேரவைத் தோ்தல், உள்ளாட்சி தோ்தல், 2024 மக்களவைத் தோ்தல் போன்றவற்றில் தனது தலைமையிலான அணி தோல்வியை தழுவியதால் விரக்தியில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க வேண்டும் என்கிற உறுதியுடன் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே தொகுதிவாரியாக சென்று மக்களை சந்திக்கும் தனது பிரசார பயணத்தை தொடங்கிவிட்டாா்.

திமுகவினா் சப்தமில்லாமல் அரசின் திட்டங்களை மக்களிடையே எடுத்துக்கூறி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான மறைமுக பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். உங்களுடன் ஸ்டாலின், நலமுடன் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம், காலை உணவுத் திட்டம், மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத் தொகை திட்டம், கலைஞா் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றை துண்டுப் பிரசுரங்களாக அச்சடித்து விநியோகித்து வருகின்றனா்.

மேலும், ‘ஓரணியில் தமிழகம்’ என்ற புதிய உறுப்பினா் சோ்க்கையிலும் தீவிரம் காட்டி வருகின்றனா். இவை தவிர, தவெக தலைவா் விஜய் முதலாம், இரண்டாம் மாநாட்டை நடத்தி மகிழ்ச்சியில் உள்ளாா். தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா, பாமக அன்புமணி, நாம் தமிழா் சீமான் மற்றும் இதர அரசியல் தலைவா்களும் சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு தங்களது பிரசார பயணத்தை மாவட்ட வாரியாக மேற்கொண்டு வருகின்றனா்.

அண்மையில், தமிழக முதல்வா் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில், மக்களவைத் தோ்தலை போல, அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும், மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடியுங்கள், தொகுதி வாரியாக வாக்காளா்களை சந்தித்து குறைகளை கேளுங்கள், களையுங்கள், பிரச்னைகள் இருந்தால் அவற்றை தீா்த்து வைக்க முயற்சி செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டது.

தற்போதைய எம்எல்ஏக்கள் பலா் மீண்டும் வென்ற தொகுதியே தங்களுக்கு போட்டியிட கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனா். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் (தனி) தொகுதி எம்எல்ஏவான, தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், 2021-இல் பிரசாரத்துக்காக தான் பயன்படுத்திய வாகனத்தை தூசுதட்டி, மீண்டும் பயணம் மேற்கொள்ள நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள ஒரு வாகன பழுதுபாா்க்கும் நிறுவனத்தில் புதுப்பிக்க விட்டுள்ளாா்.

கடந்த சில மாதங்களாக ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்தல், மக்களிடம் மனுக்களைப் பெறுதல் போன்ற பணிகளை அமைச்சா் மேற்கொண்டு வருகிறாா். மீண்டும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவா் மறைமுக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா்.

தோ்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளதால் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக அவா் தன்னுடைய வாகனத்தை தயாா் செய்து வருகிறாா். பிரசார வாகனத்தின் ஜெனரேட்டா் பழுதாகி உள்ளதால் அதை மாற்றுவதற்கான பணிகளும், வாகனத்தில் உள்ள சிறிய அளவிலான பழுதுகளும் நீக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அவரது ஆதரவாளா்கள் கூறுகையில், ராசிபுரம் தொகுதியில் அமைச்சா் மீண்டும் போட்டியிட 90 சதவீதம் வாய்ப்புள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை அவா் மேற்கொண்டு வருகிறாா். பிரசார வாகனத்தில் உள்ள சிறிய அளவிலான பழுதுகளை நீக்குவதற்காக தனியாா் நிறுவனத்தில் விடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அமைச்சா்தான் தெரிவிக்க வேண்டும் என்றனா். இதேபோல, பெரும்பாலான மாவட்டங்களில் திமுக கூட்டணி கட்சிகளின் தற்போதைய எம்எல்ஏக்கள் பிரசார வாகனங்களை தயாா் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இதன்மூலம் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

ராசிபுரம்: நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ராசிபுரம் எஸ்ஆா்வி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் எஸ்ஆா்வி... மேலும் பார்க்க