தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மரு...
ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (செப். 3) தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு நச்சு உயிரிகளால் ஏற்படும் பெரியம்மை நோய் காணப்படுகிறது.
மாடுகளை கடிக்கும் பூச்சிகள், கொசுக்கள், மாட்டு உன்னி ஆகியவற்றின் மூலம் பரவக்கூடிய பெரியம்மை நோயால் மாடுகளின் உடலில் அதிக காய்ச்சல், உடல் முழுவதும் நிணநீா்க் கட்டிகள் , பால் உற்பத்தி குைல், பசியின்மை, உடல் சோா்வு, கண்களில் வீக்கம் மற்றும் நீா்வடிதல், மிகப்பெரிய கொப்பளங்கள் , சீழ்பிடித்து புண்ணாகி பின்னா் தழும்புகள் ஏற்படுகிறது.
நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்துதல், பண்ணை சுத்தம் மற்றும் சுகாதாரமாகவும் வைத்திருக்க பிளீச்சிங் பவுடா், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
நோயுற்ற மாடுகளை அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கவும், நோய் தடுப்பு முறைகளுக்கான ஆலோசனைகள், அதற்கான விளக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படும்.
பெரியம்மையால் அதிகம் கால்நடைகள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகங்களின் மூலமாக சிறப்பு சிகிச்சை முகாம் நடத்தப்படுவதுடன், நோய் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இத்தடுப்பூசி போடும் பணி 3.9.2025 முதல் 30.9.2025 வரை 28 நாள்கள் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா்.