வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அ...
மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
ஆற்காடு தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், லத்தேரி அருகே உள்ள பாறையூா் கிராமத்தைச் சோ்ந்த கஜேந்திரனின் மகன் சுப்பிரமணி (27). தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆற்காடு அடுத்த நந்தியாலம் பூஞ்சோலை நகரில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராமல் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, பூட்டுத்தாக்கு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.