வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
அரக்கோணத்தில் மூதாட்டியின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைத்து 5 பவுன் தங்கநகைகள் களவு போயின.
அரக்கோணம், அசோக் நகா், நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (60). தனியே வசித்து வரும் இவா் கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டிக்கொண்டு சென்னையில் வசித்து வரும் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை இவரது வீட்டுக்கு அருகில் இருந்தவா்கள் ஜோதியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவருக்கு தகவல் கொடுத்துள்ளனா்.
இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாருக்கு தகவல் அளித்த ஜோதி, சென்னையில் இருந்து விரைந்து வந்து போலீஸாருடன் இணைந்து வீட்டின் உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளும், ரூ. 5,000 ரொக்கமும் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.