கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!
நடிகை கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, இன்று (செப்.3) படக்குழுவினர் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது.

கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார்.
இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
சாம் சிஎஸ் இசையமைக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
All our love and best wishes to @KeerthyOfficial as she starts something special ♥️ #TheRouteTalent#KeerthySureshpic.twitter.com/BeUovYRdxE
— TheRoute (@TheRoute) September 3, 2025