செய்திகள் :

காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!

post image

தண்டகாரண்யம் படத்தில் இருந்து ‘காவ காடே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.

கலையரசன், தினேஷ் நடித்துள்ள தண்டகாரண்யம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருந்த இப்படம் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

காவல்துறை அராஜகத்தைப் பேசும் கதையாக இப்படம் உருவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற செப். 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அறிவித்துள்ளார்.

அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம் எனும் போஸ்டர் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘காவ காடே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.

The song 'Kaava Kaade' from the movie Dhandakaranyam has been released.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... ஹிருதயபூர்வம் பற்றி மாளவிகா!

ஹிருதயபூர்வம் படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்சியாகப் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தன் மீது பொழிந்துவரும் அன்பிற்கு நன்றி தெரிவித்து நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார். சத்யன் அந்திகாட் இயக... மேலும் பார்க்க

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

நடிகை கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் படப்பிட... மேலும் பார்க்க

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படத்தை, தமிழகத்தில் இன்பன் உதயநிதி தலைமையில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகின்றது. நடிகர் தனுஷ் இயக்கி அவர் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்... மேலும் பார்க்க

6 அடி 5 அங்குலம், 159 க்ளீன் ஷீட்டுகள்... மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்த கோல்கீப்பர்!

மான்செஸ்டர் சிட்டி அணியில் பிஎஸ்ஜியின் கோல்கீப்பர் கியான்லூய்கி டோனாரும்மா இணைந்துள்ளார். மான்செஸ்டர் சிட்டி அணியில் இவர் 2030 வரை விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இத்தாலியைச் சேர்ந்த கியான்லூய்கி டோனாரும... மேலும் பார்க்க

ரூ.100 கோடி அல்ல, அதற்கும் அதிகமாக வசூலித்த லோகா: அதிகாரபூர்வ அறிவுப்பு!

லோகா திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடிக்கும் அதிகமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷிணி நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மலையாளத்தில் ஓ... மேலும் பார்க்க

செல்லியம்மன் கோயில் தேர் திருவிழா: திரளானோர் பங்கேற்பு!

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் அருள்மிகு எட்டடி முத்துசுவாமி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோயில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை... மேலும் பார்க்க