ஆரம்பமான 56-வது gst council meeting, குறையும் வரியால் பொருட்களின் விலை சரியுமா |...
ரூ.100 கோடி அல்ல, அதற்கும் அதிகமாக வசூலித்த லோகா: அதிகாரபூர்வ அறிவுப்பு!
லோகா திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடிக்கும் அதிகமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷிணி நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் அசத்தி வருகிறது.
எதிர்பாராத அளவிற்கு லோகாவுக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்து வருவதால் தமிழகத்திலும் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.101 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.