அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
கீழணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவைத்தார் அமைச்சர்!
தஞ்சை கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கில பொறியாளர் சர் ஆதார் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
தெற்கு, வடக்கு கொள்ளிட பிரிவுகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஷட்டருடன் கூடிய 80 மதகுகள் உள்ளன. இந்த அணைக்கு மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையில் தேக்கப்பட்டு ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் அனுப்பப்படுகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடி. அதாவது 150.13 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்படுகிறது.
இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வடவாறு, வீராணம் ஏரி, வடக்கு மற்றும் தெற்குராஜன் வாய்க்கால்கள் குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால் என பல்வேறு வாய்க்கால்களில் வாயிலாக பாசனத்திற்கு அனுப்பப்படுகிறது.
இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 853 ஏக்கரும் தஞ்சை மாவட்டத்தில் 1294 ஏக்கரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 37,756 ஏக்கர் விளைநிலங்கள் என ஒரு லட்சத்து 31ஆயிரத்து 903 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்த ஆண்டு கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையில் 9 அடி தேக்கப்பட்டுள்ளது. வடவாற்றில் ஆயிரம் கன அடியும் வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் தலா 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.