ரூ.100 கோடி அல்ல, அதற்கும் அதிகமாக வசூலித்த லோகா: அதிகாரபூர்வ அறிவுப்பு!
கல்யாணி பிரியதர்ஷனால் மீண்டும் வைரலான இளையராஜா பாடல்!
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல் மீண்டும் வைரலாகியுள்ளது.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் அசத்தி வருகிறது. எதிர்பாராத அளவிற்கு லோகாவுக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்து வருவதால் தமிழகத்திலும் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார இறுதிக்குள் இப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஒரு காட்சியில் அழகாக உடையணிந்து நடந்து வரும்போது பின்னணியில் இளையராஜா இசையமைத்த ‘கிளியே, கிளியே’ பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன.
இப்பாடலுடன் கல்யாணியைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக விசிலடித்தனர். தற்போது, யூடியூபில் இந்தக் ’கிளியே, கிளியே’ பாடல் வைரலாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பாடலைப் பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்திருந்த நிலையில், மீண்டும் இணையத்தைக் கலக்கி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
நடிகர் மம்மூட்டி நடித்த ’ஆ ராத்ரி (அந்த இரவு)’ படத்தில் இளையராஜா இசையமைத்த கிளியே பாடலை பூவாச்சல் காதர் எழுத, ஜானகி பாடியிருந்தார்.
இதையும் படிக்க: 'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்