செய்திகள் :

அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

post image

சிஎஸ்கேவிலிருந்து விலகிய ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் விளையாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் இருந்து அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்.

இங்கிலாந்தின் தி ஹன்ட்ரெட், துபையின் ஐஎல்டி20 ஆகிய தொடர்களில் அஸ்வின் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அஸ்வினை அழைத்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிரிக்கெட் ஆஸ்திரேலிய சிஇஒ டாட் கிரீன்பெர்க், “அஸ்வின் மாதிரி ஒருவர் பிபிஎல் தொடருக்கு வந்தால் அது எங்களுக்கு மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும். அஸ்வின் ஒரு சாம்பியன் கிரிக்கெட்டர். அவர் வந்தால் பிக் பாஷ் லீக்கிற்கும் எங்களது கோடைக் காலத்திற்கும் மிகுந்த வரவேற்பாக இருக்கும்” என்றார்.

333 டி20 போட்டிகளில் 317 விக்கெட்டுகள், 1,233 ரன்கள் குவித்துள்ளார்.

After The Hundred and the ILT20, R Ashwin is now reportedly in talks with Cricket Australia for a move to Down Under for the Big Bash League (BBL).

முதல் டி20: பிரையன் பென்னட் அரைசதம்; இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களி... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடருக்காக ரிஸ்க் எடுக்கத் தயார்: பாட் கம்மின்ஸ்

ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேய... மேலும் பார்க்க

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்க... மேலும் பார்க்க

கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!

பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் பாதிமா சனா உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி போல கூலாக இருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்த மாதத்... மேலும் பார்க்க

39 வயதில் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம்! சிக்கந்தர் ராஸா அசத்தல்.!

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து 39 வயதான ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஸா அசத்தியுள்ளார்.ஐசிசியின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படும். அதன்பட... மேலும் பார்க்க

இருமுனை கத்தியாக உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை! - முன்னாள் பயிற்சியாளர் கருத்து

உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இருமுனை கூர் கொண்ட கத்தியாக இருக்கும் என இந்திய மகளிரணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் தெரிவித்துள்ளார். 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் போட... மேலும் பார்க்க