செய்திகள் :

பஞ்சாப் வெள்ளம்! 5,500 மக்கள், 300 துணை ராணுவ வீரர்கள் மீட்பு!

post image

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 300 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் 5,500 மக்கள், ராணுவப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாபில், பெய்த கனமழையால் காகர் நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் தர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஷாகோட், ஃபில்லூர் மற்றும் தாதேவால் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும் இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு, தற்போது வரை 50 ராணுவக் குழுக்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

இதன்மூலம், தற்போது வரை பஞ்சாபில் இருந்து 300 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் 5,500-க்கும் அதிகமான மக்களை ராணுவக் குழுக்கள் மீட்டுள்ளன.

மேலும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 3,000-க்கும் அதிகமானோருக்கு மருத்துவ உதவிகள் மற்றும் 27 டன் அளவிலான உணவுப் பொருட்களையும் ராணுவம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வெள்ளத்தால் முடக்கப்பட்ட சம்ப் எனும் கிராமத்தில் தவித்த கர்ப்பிணி பெண்ணை ராணுவப் படையின் ஹெலிகாப்டரின் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பஞ்சாப் வெள்ளத்தில் சுமார் 30 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை அம்மாநில அரசு பேரிடராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!

In Punjab, 300 paramilitary personnel and 5,500 people have been rescued by the army from flood-affected areas.

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். வட மாநிலங்களான ஜம்மு... மேலும் பார்க்க

சாலையில் நடனம்: அராஜகத்தை ஊக்குவிக்கிறார் தேஜஸ்வி - பாஜக

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விதிமுறைகளுக்கு மாறாக சாலையில் நடனமாடி அராஜகத்தை ஊக்குவிப்பதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. மேலும், கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டிய... மேலும் பார்க்க

ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து படுகாயமடைந்த, மற்றொரு பச்சிளம் குழந்தையும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தூர் மாவட்டத்தில் உள்ள, மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத... மேலும் பார்க்க

ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், இளைஞர்களுடன் இரவுச் சாலையில் நடனமாடிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில், பாடலுக்கு ஏற்பவும் இளைஞர்களின் நடன அசைவுகளுக்கு ஏற்பவும் த... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம் பேரிடராக அறிவிப்பு! 30 பேர் பலி!

பஞ்சாபை பேரிடர் பாதித்த மாநிலமாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இன்று வரை 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட... மேலும் பார்க்க