அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்
யுஎஸ் ஓபனில் முதல்முறை... அரையிறுதியில் மோதும் ஜோகோவிச் - அல்கராஸ்!
யுஎஸ் ஓபன் அரையிறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸும் நோவக் ஜோகோவிச்சும் மோதுகிறார்கள்.
இறுதிப் போட்டியில் மோதும் அனுபவம் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என்பதால் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யு.எஸ்.ஓபன் காலிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் செக் குடியரசின் லெஹெக்காவினை 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றுமொரு காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை 6-3, 7-5, 3-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
யுஎஸ் ஓபனில் இவர்கள் முதல்முறையாக மோதுகிறார்கள். அரையிறுதியில் வரும் சனிக்கிழமை (செப்.6) பலப்ப்ரீட்சை செய்யவிருக்கிறார்கள்.
இதுவரை இருவரும் 8 முறை மோதிக்கொண்டதில் ஜோகோவிச் 5-3 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரிவில் சபலென்கா, பெகுலாவும் அரையிறுதியில் மோதுகிறார்கள்.
New York, New York get ready. pic.twitter.com/7dDFf6ni5P
— US Open Tennis (@usopen) September 3, 2025