செய்திகள் :

யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256

post image

''வீடு தாண்டி வெளியிடங்களில், புதுநபர்களோட செக்ஸ் வைத்துக்கொள்வது சகஜமாகிக்கொண்டே இருக்கிறது.

இதெல்லாம் இப்போதுதான் இருக்கிறதா என்றால், இது எல்லா காலத்திலும் இருந்ததுதான். ஆனால், பார்ட்டி, மது, போதை, பாதுகாப்பில்லாமல் புதுநபர்களுடன் செக்ஸ் என இப்போது அதிகரித்திருக்கிறதை அனுபவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

செக்ஸ்
செக்ஸ்

'ஒரு த்ரில்லுக்காக, ஒரு சேஞ்சுக்காக புது இடத்துல புது நபரோட செக்ஸ் வெச்சுக்கிட்டேன் டாக்டர். எனக்கு ஏதாவது பால்வினை நோய் வந்திடுமா' என அச்சப்படுபவர்கள் ஒருபக்கம்... இன்னொருபக்கம் தாம்பத்திய வாழ்க்கை போரடித்துவிட்டதால், வெளியிடங்களில், புதுநபருடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். இது எந்தளவுக்கு ஆபத்தாக முடியலாம் என்பதை அறியாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்'' என்கிற சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், வெளியிடங்களில், புதுநபர்களுடன் யாரெல்லாம் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது; ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதை விளக்கினார்.

''ஒரே அறைக்குள்ளே ஒரே மாதிரி செக்ஸ் செய்தால், தம்பதியருக்குள் எத்தனை காதல் இருந்தாலும் போரடித்துவிடும். அதனால், ஒருநாள் பெட்ரூமில், இன்னொரு நாள் ஹாலில், இன்னொரு நாள் பாத்ரூம் ஷவருக்கு கீழே என இடங்களை மாற்றுங்கள். செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.

அல்லது புது இடங்களில், ஹோட்டல் அறைகளில் செக்ஸ் செய்யும்போது தம்பதியருக்கு த்ரில்லாக இருக்கும். இது இயல்பான ஒன்றுதான். த்ரில்லுக்காக, மாற்றத்துக்காக புது நபர்களுடன் செக்ஸ் கொள்வது பாதுகாப்பு கிடையாது.

தாம்பத்தியம்
தாம்பத்தியம்

நடுத்தர வயதுகளில் இருப்பவர்கள் அல்லது வயதானவர்கள் அல்லது ஏற்கெனவே ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் புது இடங்களில், புது நபர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

அதிகப்படியான எக்சைட்மென்ட் காரணமாக மனப்பதற்றமும், இதயத்துடிப்பு அதிகரிப்பும் ஏற்படலாம். இதனால், முதல்முறை ஹார்ட் அட்டாக் வருவதற்கோ அல்லது ஏற்கெனவே வந்தவர்களுக்கு இரண்டாவது முறை ஹார்ட் அட்டாக் வருவதற்கோ வாய்ப்பிருக்கிறது.

ஒருசிலர், இப்படி வெளியிடங்களில் புது நபருடன் உறவுகொள்வதில் எந்தப் பின்னடைவும் வந்துவிடக்கூடாது; அந்த அனுபவத்தை முழுமையாக என்ஜாய் செய்துவிட வேண்டும் என்பதற்காக, வயாகரா மாத்திரை எடுத்துக்கொள்வார்கள். இது சிலருக்கு பிரச்னையாகி என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள்.

தவிர, ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக எங்கோ ஒருசிலருக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது மனப்பதற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது அவர்களுக்கு உடனே டாய்லெட் செல்கிற அளவுக்கு அசெளகர்யத்தைக் கொடுக்கும். சிலருக்கு அரிதிலும் அரிதாக ஹார்ட் அட்டாக்கும் வரலாம். அதனால், வெளியிடங்களில், புதுநபர்களுடன் செக்ஸை தவிர்ப்பதே நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing

தன்னுடைய உறுப்பு பெரிதாக இல்லை என்கிற எண்ணம் கிட்டத்தட்ட 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. இதில் சிலர் ஆணுறுப்பை மசாஜ் செய்து பெரிதாக்கி விடலாம் என்கிற நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மைதானா; இந்த ... மேலும் பார்க்க

வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதா? -நிபுணர் பதில் | காமத்துக்கு மரியாதை -254

கணவனைவிட மனைவி வயது கூடுதலாக இருப்பது தற்போது சகஜமாகிக்கொண்டு வருகிறது. அந்தக் காலத்தில் உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக இது பெற்றோர்களாலே நடத்தி வைக்கப்பட்டது. இந்தக் காலத்தில் காதல் திருமணங... மேலும் பார்க்க

இளம் வயதில் போதைப்பழக்கம்; பிற்கால தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்? - காமத்துக்கு மரியாதை 253

மது, போதைப்பொருள், செல்போனில் ஆபாசப்படங்கள் என இளைய தலைமுறையினர் மீது எல்லா பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இவற்றைத் தடுக்கும் ஒரே தடுப்பூசி செக்ஸ் கல்விதான் என்கிற சென்னையைச... மேலும் பார்க்க

Chem Sex: இளைஞர்களை ஆபத்தில் தள்ளிக்கொண்டிருக்கும் கெம் செக்ஸ்! - காமத்துக்கு மரியாதை 252

''ஹெச்.ஐ.வி தொற்றுடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இது தவிர 20 வகையான பால்வினை நோய்கள் உள்ளன. இவற்றில் பாக்டீரியாக்களால் வருகிற பால்வினை நோய்களைப் பாதிக்கப்பட்டவர்கள் உடனே வந்தால் சரி செய... மேலும் பார்க்க