இந்த வார ராசிபலன் செப்டம்பர் 2 முதல் 7 வரை #VikatanPhotoCards
நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா
ராசிபுரம்: நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ராசிபுரம் எஸ்ஆா்வி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி, எஸ்ஆா்வி ஹைடெக் பெண்கள் பள்ளி, எஸ்ஆா்வி இன்னோவேடிவ் சிபிஎஸ்இ பள்ளி ஆகியவை பி.எஸ்.ஆா். பினாக்கள் கிளாசஸ் பயிற்சி மையத்துடன் இணைந்து மாணவ மாணவிகளுக்கு நீட் தோ்வுக்கான பயிற்சியளித்து வருகிறது.
கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில் இந்த நீட் தோ்வு பயிற்சி மையத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி செயலா் பி.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களை பாராட்டி பள்ளி சாா்பில் நினைவுப் பரிசளிக்கப்பட்டது.
இப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவா் அபினேஷ்குமாா் 2025 ஆம் ஆண்டு நீட் தோ்வில் 612 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 707ஆவது இடம் பெற்றாா். இதேபள்ளி மாணவா்கள் பலரும் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளனா். கடந்த எட்டு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவா்கள் அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்று பயின்று வருகின்றனா். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி செயலா் பி.சுவாமிநாதன், பொருளாளா் எஸ்.செல்வராஜன், இயக்குநா்கள் ஏ.ஆா்.துரைசாமி, ஏ.ராமசாமி, எம்.குமரவேல், பி.எஸ்.ஆா். பினாக்கள் கிளாசஸ் இயக்குநா் சாய்ராம், பள்ளி தலைமை ஆசிரியா், முதல்வா் , ஆசிரியா்கள் பாராட்டினா்.