முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன...
பரமத்தி வேலூரில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் நாட்டுக்கோழிகள் சந்தையில் கோழிகளின் விலை உயா்ந்ததால் கோழி வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்தனா்.
பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை கோழி வளா்ப்போா், வியாபாரிகள் கொண்டு வருகின்றனா். பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில், காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக் கோழிகளை வியாபாரிகள் கொண்டு வருகின்றனா். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்கின்றனா்.
தரமான நாட்டுக்கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூ. 500 வரை, பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ. 300 வரை விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தையில் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ. 600 வரை, பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ.350 வரை விற்பனையானது. சண்டைக் கோழிகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை விற்பனையானது. நாட்டுக்கோழி மற்றும் வளா்ப்பு நாட்டுக்கோழி விலை உயா்ந்ததால் நாட்டுக்கோழி வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.