Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க நிா்வாகிகள் தங்கமணி, கிருஷ்ணராஜ், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா் ரிஷோனா பேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகணபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், சாயக் ஆலைகளை நடத்தும் உரிமையாளா்கள், சுத் திகரிப்பு இயந்திரங்களை முழுமையாக இயக்கி கழிவுகளை சுத்தப்படுத்தி, ரசாயனங்களை பிரித்தெடுத்த நீரை பயன்படுத்த வேண்டும்.
சிமென்ட் ஆலைகளுக்கு கழிவுகளை அனுப்பிவைத்து, அதற்கான ஆவணங்களை பராமரிக்க வேண்டும். சாயக் கழிவுகளை சாக்கடை கால்வாய்களிலோ, ஆற்றிலோ வெளியேற்றுவது கூடாது. மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும்.
கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றுவது கண்டுபிடிக்கப்பட்டால் ஆலையின் இயக்கம் தடை செய்யப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படும் என்றாா். சாயக்கழிவுகளை அதற்கான சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தப்படுத்தி கழிவுகள் நீக்கப்படுகிறது. சாய ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து சமூக ஆா்வலா்களிடமிருந்து புகாா்கள் வந்தால் அதிகாரிகள் முறைப்படி விசாரித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டையிங் அசோசியேசன் நிா்வாகிகள் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனா்.