தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மரு...
``இந்தியா உடனான உங்களது உறவை மதிக்கிறேன்; ஆனால்'' - புதினிடம் பாகிஸ்தான் பிரதமர் பேசியது என்ன?
கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என இரு நாள்களாக சீனாவின் தியான்ஜின்னில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது.
அதில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரின் சந்திப்பு உலக அரங்கின் ஹைலைட்டாக அமைந்தது.
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கலந்துகொண்டார்.

புதின் - ஷெபாஸ் சந்திப்பு
நேற்று புதின் மற்றும் ஷெபாஸ் ஷெரீப் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது ஷெபாஸ் ஷெரீப் புடினிடம், “பாகிஸ்தானுக்கு நீங்கள் வழங்கும் ஆதரவிற்கும், எங்களது பிராந்தியத்தில் சமநிலையாக நீங்கள் நடந்து கொள்வதற்கும் நன்றி.
உங்களுக்கும், இந்தியாவிற்கும் இடையே உள்ள உறவை நான் மதிக்கிறேன்.
ஆனால், நாங்களும் உங்களுடன் வலுவான உறவினை கட்டமைக்க விரும்புகிறோம்.
இந்த உறவு எங்களது பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கு துணைபுரியும் வகையில் இருக்கும்” என்று பேசியுள்ளார்.
ட்ரம்ப் - புதின் - பாகிஸ்தான்!
இந்த உச்சி மாநாடு முடிந்து, கடந்த திங்கட்கிழமையே இந்தியா திரும்பிவிட்டார் மோடி. ஆனால், உச்சி மாநாட்டில் மோடி மற்றும் புதின் நட்பு பெரிதும் கவனிக்கப்பட்டது.
இதற்கு முக்கிய காரணம், ரஷ்யா உடன் வணிகம் செய்து வருவதால், இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி.
பாகிஸ்தான் ட்ரம்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் தொடரும் நிலையில், புதினிடம் தற்போது உதவி கேட்டுள்ளார்.