மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை(செப்.3) 120அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு அணைக்கு வினாடிக்கு 29,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 28,500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 6000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.