54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!
ஓப்போ நிறுவனத்தில் புதிய தயாரிப்பாக என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகமாகியுள்ளது.
மக்களைக் கவரும் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த இயர் பட்ஸ் 560mAh திறனுடன் 54 மணிநேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஓப்போ நிறுவனத்தின் தயாரிப்புகள், இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளன. இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான அம்சங்களுடன் மின்னணு சாதனங்களை தயாரித்து வருகிறது.
தற்போது புதிதாக என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் 560mAh பேட்டரி திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக 54 மணிநேரங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு (இடது / வலது) கருவியும் தனித்தனியாக 58mAh பேட்டரிகளைக் கொண்டுள்ளதால், தனித்தனியாக தொடர்ந்து 12 மணிநேரத்துக்கு பயன்படுத்தலாம்.
சார்ஜிங் அம்சம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 4 மணிநேரத்திற்கு பயன்படுத்தலாம்.
ட்ரூ வையர்லெஸ் ஸ்டீரியோவால், பேட்டரிகள் தரச் சான்றிதழ் பெற்றுள்ளன.
புளூடூத் 5.4 அம்சத்தின் மூலம் வேகமாக சாதனங்களுடன் இணைத்துக்கொள்ள முடியும்.
இயர் பட்ஸில் தொடுதிறன் மூலம் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்புகளை ஏற்பது / துண்டிப்பது, பாடல்களை மாற்றுவது என தொடுதிறன் மூலம் செய்துகொள்ளலாம்.
வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன.
இதன் விலை ரூ. 1,799. சில வங்கி கடன் அட்டைகளுக்கு ரூ.200 தள்ளுபடி உண்டு.
இதையும் படிக்க | ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ. 2,500 வரை விலை குறைய வாய்ப்பு!!