செய்திகள் :

நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

post image

மும்பை: உலோகப் பங்குகளின் ஏற்றம் தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த அதீத நம்பிக்கையால், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 80,671.28 என்ற அதிகபட்ச அளவு சென்ற பிறகு 80,004.60 என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது.

ஏற்றம் மற்றும் சரிவுக்கு இடையில் ஊசலாடிய பிறகு, 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 409.83 புள்ளிகள் உயர்ந்து 80,567.71 புள்ளிகளாகவும், 50-பங்களை கொண்ட நிஃப்டி 135.45 புள்ளிகள் உயர்ந்து 24,715.05 ஆக நிலைபெற்றது.

வரி விகிதங்களை 5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதமாகக் குறைப்பது குறித்து விவாதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டு நாட்கள் புதுதில்லியில் கூடி முடிவு எடுக்கும்.

இன்றைய வர்த்தகத்தில் 3,138 பங்குகள் வர்த்தகமான நிலையில் 2,087 பங்குகள் உயர்ந்தும் 960 பங்குகள் சரிந்தும் 91 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

சென்செக்ஸில் டாடா ஸ்டீல் 5.90 சதவிகிதம் அதிகமாக உயர்ந்தது. அதே வேளையில் டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா, ஐடிசி, எடர்னல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் டிரென்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் இன்ஃபோசிஸ், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

ஜிஎஸ்டி குறித்த பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்திய பங்குச் சந்தைகள் கலவையான தொடக்கத்திற்குப் பிறகு உயர்வுடன் முடிவடைந்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி உயர்ந்தும், அதே நேரத்தில் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்த வர்த்தகமானது.

ஐரோப்பாவில் பங்குச் சந்தைகள் உயர்ந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாயன்று) ரூ.1,159.48 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.52 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 68.09 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: மிதமாகக் குறைந்த மாருதி சுஸுகி விற்பனை

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.டாட... மேலும் பார்க்க

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் ஆகிய காரணங்களால், இன்றைய டாலருக்கு நிகரான இந்திய ரூ... மேலும் பார்க்க

54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!

ஓப்போ நிறுவனத்தில் புதிய தயாரிப்பாக என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகமாகியுள்ளது. மக்களைக் கவரும் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த இயர் பட்ஸ் 560mAh திறனுடன் 54 மணிநேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கும் வகை... மேலும் பார்க்க

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன?

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில் தற்போது சற்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,295.99 புள்ளிகளி... மேலும் பார்க்க

யுபிஐ மூலம் ஜிஎஸ்டி: ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி வசதி

ஒருங்கிணைந்த பணப்ரிமாற்ற முறை (யுபிஐ), கடன் அட்டை (கிரெடிட் காா்டு), வங்கிக் கணக்கு அட்டை (டெபிட் காா்டு), இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளா்கள் மற்றும் வாடிக்கையாளா் அல்லாதவா்கள் ... மேலும் பார்க்க