இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!
கொழும்பு: இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தற்காலிக புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இது குறித்து தெரிவிக்கையில், இந்த மாதத்தில் 1,98,235 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ள நிலையில், இது ஒரு வருடத்திற்கு முன்பு 1,64,609 ஆக இருந்தது என்றது.
சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் ஜப்பானை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 46,473 சுற்றுலாப் பயணிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 17,764 சுற்றுலாப் பயணிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் அதனை தொடர்ந்து ஜெர்மனியர் 12,500 பயணிகளுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 15,66,523 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள் 3,25,595 பேரும், அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து 1,51,000 பேரும் அதே வேளையில் ரஷ்யாவிலிருந்து 118,000 பேரும் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையானது, கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இது 20.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.