செய்திகள் :

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முன்னதாக பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

post image

மும்பை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக எச்சரிக்கையுடன் வங்கி மற்றும் ஆட்டோ பங்குகளில் கடைசி சில மணிநேர முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் இன்றைய ஆரம்ப ஏற்றங்களை மாற்றியமைத்து, சென்செக்ஸ் 206.61 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் உயர்ந்து தொடங்கிய பங்குச் சந்தை, பிற்பகல் வரை லாபத்துடன் வர்த்தகமானது. பகலில், அதிகபட்சமாக 24,756.10 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 24,522.35 புள்ளிகளையும் எட்டியது.

முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 206.61 புள்ளிகள் சரிந்து 80,157.88 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 45.45 புள்ளிகள் சரிந்து 24,579.60 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை சரிந்தும் பவர் கிரிட், என்டிபிசி, டாடா ஸ்டீல் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தைச் சுற்றியுள்ள நேர்மறையான உள்நாட்டு குறிப்புகள் மற்றும் நம்பிக்கையின் பெயரில் சந்தைகள் உறுதியான குறிப்பில் அமர்வைத் தொடங்கிய நிலையில், ஆரம்ப ஏற்றத்திற்குப் பிறகு, முதல் பாதியில் நிஃப்டி படிப்படியாக உயர்ந்தது. இருப்பினும் பிந்தைய பாதியில் வங்கி மற்றும் ஹெவிவெயிட் நிறுவனங்களில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக சந்தை தடம் புரண்டது.

ஜிஎஸ்டி கவுன்சில் செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு புதுதில்லியில் கூடி, முன்மொழியப்பட்ட விகிதங்களைக் குறைப்பது குறித்து விவாதிக்க உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்ததால், உள்நாட்டு பங்குச் சந்தைகள் வலுவான மேக்ரோ தரவுகள் இருந்தும் லாப முன்பதிவால் சரிந்தன.

பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 0.64 சதவிகிதம் உயர்ந்தது, மிட்கேப் குறியீடு 0.27 சதவிகிதம் உயர்ந்தது.

பிஎஸ்இ-யில் துறை வாரியாக, வங்கி 0.68 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தும், அதைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு 0.59 சதவிகிதமும், நிதி சேவைகள் 0.44 சதவிகிதமும், டெக் 0.28 சதவிகிதம் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் 0.13 சதவிகிதம் சரிந்தன முடிவடைந்தன.

அதே வேளையில் மின்சாரம் 1.62 சதவிகிதம் உயர்ந்த நிலையில் அதைத் தொடர்ந்து பயன்பாட்டுப் பொருட்கள் 1.47 சதவிகிதமும், எஃப்எம்சிஜி 1.12 சதவிகிதமும், உலோகம் 0.90 சதவிகிதமும், ரியல் எஸ்டேட் 0.67 சதவிகிதம் மற்றும் எரிசக்தி 0.65 சதவிகிதமும் சரிந்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி மற்றும் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு உயர்ந்த நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹாங் செங் சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்ப சந்தைகள் சரிந்த நிலையில், தொழிலாளர் தின விடுமுறைக்காக அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) மூடப்பட்டது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.72 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 69.36 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: சுசூகி இந்தியா விற்பனை ஆகஸ்ட் மாதம் 9% அதிகரிப்பு!

Reversing its early gains, benchmark BSE Sensex declined by 206 points due to last-hour profit-taking in banking and auto shares amid caution ahead of the GST Council meeting.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

கொழும்பு: இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தற்காலிக புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு!

மும்பை: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் 15 சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரிதான கேமரா வடிவமைப்பும், பேட்டரி திறனும் மக்களைக் கவரும் அம்சங்களாக இருக்கும் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? புது அம்சங்களாக என்னென்ன எதிர்பார்க்கலாம்?

இன்னும் சில நாள்களில் சந்தையில் அறிமுகமாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 17 மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபோன் 17 மாடல்களில் புது அம்சங்கள் ... மேலும் பார்க்க

2-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 2) காலை 80,520.09 புள்ளிகளில் தொடங்கிய ... மேலும் பார்க்க

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவா்த்தனை

புது தில்லி: இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது. இது குறித்து தேசிய பணப்பரிமாற்றக் க... மேலும் பார்க்க