செய்திகள் :

"வெள்ள நீரை வீட்டில் சேமியுங்கள்; அணை கட்ட 10 வருடங்கள் ஆகும்" - பாகிஸ்தான் அமைச்சர் யோசனை

post image

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத பருவமழையால், 150 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டின் முக்கிய கோதுமை உற்பத்தி மாகாணமான பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.

அந்நாட்டு ஊடக தகவலின்படி, கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 2,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பஞ்சாப் மாகாணம் - பாகிஸ்தான்
பஞ்சாப் மாகாணம் - பாகிஸ்தான்

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் வெள்ள பாதிப்பை எடுத்துரைத்த பஞ்சாப் மாகாணத்தின் மூத்த அமைச்சர் மரியம் ஔரங்கசீப், "பஞ்சாப் வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளம் இது. இரண்டு மில்லியன் மக்களை இது பாதித்துள்ளது.

சட்லெஜ், செனாப் ராவி ஆகிய மூன்று ஆறுகள் ஒரே நேரத்தில் இவ்வளவு நீருடன் பெருக்கெடுத்து செல்வது இதுவே முதல் முறை" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தனியார் ஊடக நேர்காணல் ஒன்றில், "இந்த வெள்ள நீரை யாராவது சேமித்து வைக்க வேண்டும்.

வெள்ள பாதிப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் வெள்ள நீரை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று, அங்கேயே கொள்கலனில் சேமிக்க வேண்டும். அந்த நீரை ஆசீர்வாதமாக நாம் பார்க்க வேண்டும்.

வெள்ள பாதிப்புகளைத் தடுக்க பெரிய அணைகள் கட்டப்பட வேண்டும். அந்தப் பணிகள் முடிவடைய 8 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம்" என இன்று (செப்டம்பர் 2) கூறியிருக்கிறார்.

இவரின் இத்தகைய பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினையைத் தூண்டியிருக்கிறது.

'GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தனியார் வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின... மேலும் பார்க்க

France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

ஐரோப்பாவில் இன்னும் ஒரு வருடத்துக்குள் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதனால், இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளை தயாராக இருக்கும்படி கூறியுள்ளது பிரான்ஸ் அரசு. ரஷ்யா மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

* அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்?* வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு!* ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா?* மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...... மேலும் பார்க்க

'லேப்டாப் எங்க... தாலிக்கு தங்கம் எங்க..?' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் மதுரை மேலூரில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் இந்தியா கூட்டணியையு... மேலும் பார்க்க

மனோஜ் ஜராங்கே கோரிக்கையை ஏற்ற அரசு; முடிவுக்கு வரும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்!

மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே 30 ஆயிரம் மராத்தா இன மக்களோடு சேர்ந்து மும்பையில் கடந்த 29ம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மும்பையின் தென்பகுதியில் உள்... மேலும் பார்க்க