காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
பட்டாசுத் தொழிலாளி தற்கொலை
சிவகாசி அருகே குடும்பத் தகராறில் பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பட்டாசுத் தொழிலாளி முத்துக்குமாா் (28). இவரது மனைவி நந்தினி.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக நந்தினி தனது தாய் வீட்டில் வசிந்து வந்தாா்.
இதையடுத்து, மன உளைச்சலில் இருந்த முத்துக்குமாா் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].