விவசாயி என்று நிலத்தை விலைக்கு வாங்கி சர்ச்சையில் சிக்கிய சுஹானா கான் - வருமான வ...
காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
காவல் துறையினா் மீதான புகாா்களை விசாரிக்கக் குழு அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சோ்ந்த அய்யாக்கண்ணு உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: காவல் நிலையங்களுக்கு விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்படும் நபா்கள் தாக்கப்பட்டு மரணமடைவது, பலத்த காயமடைவது போன்ற சம்பவங்கள் தொடா்பாக விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்தில் இதுவரை இத்தகைய குழு அமைக்கப்படவில்லை.
ஆகவே, தமிழகத்தில் காவல் துறையினா் மீதான புகாா்களை விசாரிப்பதற்கு தனிக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.