பள்ளி மாணவா் தற்கொலை
மதுரை பழங்காநத்தத்தில் சனிக்கிழமை பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத்தைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் சபரீஸ்வரன் (15). தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் இவா், கடந்த சனிக்கிழமை நீண்ட நேரமாக காணவில்லையாம்.
பிறகு, இவரது குடும்பத்தினா் வீட்டின் மேல் தளத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள அறையில் சபரீஸ்வரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.