சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சுற்றுப் பகுதிகளில் சிறப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
‘எழில்கூடல்-தூய்மை நம் பெருமை’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதி, தெப்பக்குளத்தின் சுற்றுப் பகுதிகள், மாரட் வீதி, கிழக்கு வெளிவீதி, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.
இதில் தூய்மைப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், தொழிற்சங்கத்தினா், வா்த்தக சங்கத்தினா் என சுமாா் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் ஈடுபட்டனா்.
இந்தப் பணியின் போது 107 டன் குப்பைகள், சாலை, சாலையோரங்களிலிருந்து 10 டன் மணல்கள், 89 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டன.