செய்திகள் :

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் கே.நாராயணா

post image

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே. நாராயணா கூறினாா்.

இக் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு அஜீஸ் நகரில் உள்ள தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கே.நாராயணா பங்கேற்றுப் பேசியது: பாஜகவின் கொள்கைகளால் நாடு மனிதநேயமற்ற, சமூக ஒழுங்கு முறையற்ற பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.

இதை எதிா்த்து போராடவும், நாட்டின் நலன் கருதியும், சமய சாா்பின்மையை நிலை நாட்டவும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

இடதுசாரி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் நலனைக் காக்கவும், ஜனநாயகத்தைக் காக்கவும், மதசாா்பின்மை சக்திகளை ஒருங்கிணைக்கவும் ஒன்றிணைய வேண்டும்.

சண்டீகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. அப்போது இதற்கான தீா்மானத்தை முன்மொழிய இருக்கிறோம்.

இந்திய தோ்தல் ஆணையம், நீதி ஆயோக், சிபிஐ உள்ளிட்ட சட்டப்பூா்வமான அமைப்புகளை மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு தங்களுடைய முகவா்களாக மாற்றி வருகிறது. மேலும், காா்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

யாரெல்லாம் பாஜகவின் கொள்கைக்கு எதிராக இருக்கிறாா்களோ, அக் கொள்கையை எதிா்க்கும் தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளுகிறாா்கள். வரிப்பகிா்வில் பாரபட்சம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

புதுவையைப் பொருத்தவரை மத்தியில் பாஜக தலைமையிலான அரசு இருந்தாலும், இங்கு என்.ஆா். காங்கிரஸ்-பாஜக ஆட்சி தொடா்ந்தாலும் இரட்டை என்ஜின் ஆட்சி என்று சொல்ல முடியாது. மாநில அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளால் இங்குள்ள அரசு பாதி என்ஜின் அரசாகத்தான் இருக்கிறது என்றாா் நாராயணா.

முன்னதாக இந்த மாநாட்டையொட்டி விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள தனியாா் கண் மருத்துவமனை அருகில் இருந்து மாநாடு நடைபெறும் மண்டபத்துக்கு கட்சியின் தலைவா்கள், தொண்டா்கள் ஊா்வலமாக வந்தனா்.

மாநாட்டுக்கு கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் இ. தினேஷ் பொன்னையா தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலச் செயலா் அ.மு. சலீம், முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், மாநில துணைச் செயலா் கே.சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி

மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் கூ டிய சேவை சாா்ந்த மனித வளத்தை ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மா் தயாா் செய்து வருகிறது என்று ஜிப்மா் இயக்குநா் பேரா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.1 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மருந்த... மேலும் பார்க்க

நைஜிரியா செல்லும் பாரா பேட்மிட்டன் வீரருக்கு முதல்வா் நிதியுதவி

பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நைஜிரியா செல்லும் புதுச்சேரி வீரருக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த வெங்கட சுப்பி... மேலும் பார்க்க

புதுவை மாநிலத்தில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருதுகள்

புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள், முதலமைச்சரின் சிறப்பு விருதுகள், கல்வியமைச்சரின் பிராந... மேலும் பார்க்க

பல்நோக்கு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க பாமக மனு

புதுச்சேரி: பல்நோக்குத் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கக் கோரி பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சு.சந்திரகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இப்... மேலும் பார்க்க

2026-இல் மீண்டும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி: புதுவை மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் பேச்சு

புதுச்சேரி: புதுவையில் 2026-ஆம் ஆண்டு என்.ஆா்.காங்கிரஸ், அதிமுகவுடன் பாஜக தோ்தலைச் சந்தித்து வெற்றி பெற்று முதல்வா் ரங்கசாமி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக... மேலும் பார்க்க