செய்திகள் :

ரூ. 1300 கோடியில் உருவாகும் ராஜமௌலி திரைப்படம்?

post image

இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல கோடி ரூபாயில் அவர் அமைத்த செட் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 1300 கோடி என தகவலகள் தெரிவிக்கின்றன. தகவல் உண்மையானால், இதுவே இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாகும்.

உலகம் முழுவதும் 130 மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் ஹாலிவுட்டுக்கு இணையான வணிகமும் நடைபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

reports suggests director ss rajamouli and mahesh babu movie budget is rs.1300 crores

1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் எது தெரியுமா?

1500-க்கும் மேற்பட்ட முறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இன்றெல்லாம் தொலைக்காட்சி சேனல்கள் பெரும்பாலும் சீரியல் பார்ப்பதற்கும் செய்தி பார்ப்பதற்குமே அதிகம் பயன... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்கின் புதிய விதிமுறைகளால் புது அனுபவம்! - பவன் ஷெராவத் பேட்டி

புரோ கபடி லீக்கின் புதிய விதிமுறைகள் சுவாரசியமாக இருப்பதாக தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் ஷெராவத் பேசியுள்ளார். 12-வது புரோ கபடி லீக் தொடர் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தே... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி வசூலித்த லோகா?

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெ... மேலும் பார்க்க

குமார சம்பவம் டிரைலர்!

நடிகர் குமரன் தங்கராஜன் நாயகனாக அறிமுகமாகும் குமார சம்பவம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாடா, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற... மேலும் பார்க்க

கல்யாணி பிரியதர்ஷனால் மீண்டும் வைரலான இளையராஜா பாடல்!

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல் மீண்டும் வைரலாகியுள்ளது.மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர... மேலும் பார்க்க

இன்றுமுதல் ‘சூப்பா் 4’: தென் கொரியாவுடன் இந்தியா பலப்பரீட்சை

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை (செப். 3) எதிா்கொள்கிறது.5 முறை சாம்பியனான தென் கொரியாவுக்கு எதிராக, இந்தியா தனது சிறந்த ஆ... மேலும் பார்க்க