BRS: "மிகவும் வேதனையளிக்கிறது" - சஸ்பெண்ட் ஆன ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகிய ...
ரூ. 100 கோடி வசூலித்த லோகா?
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் அசத்தி வருகிறது. எதிர்பாராத அளவிற்கு லோகாவுக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்து வருவதால் தமிழகத்திலும் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வருகிற வெள்ளிக்கிழமை கேரளத்தில் ஓணம் என்பதால் பல திரையரங்குகளில் 6 காட்சிகளாக அதிகாலை வரை லோகா திரையிடப்படுகிறதாம். இதனால், இந்தாண்டு வெளியான மலையாளப் படங்களில் லோகா வசூல் சாதனையைச் செய்யலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கல்யாணி பிரியதர்ஷனால் மீண்டும் வைரலான இளையராஜா பாடல்!