செய்திகள் :

Gold Loan: தங்கம் விலை மட்டுமல்ல, தங்க நகை அடமானக் கடனும் எகிறுதுங்கோ! என்னதான் காரணம்?

post image

தங்கம் விலை ஒருபக்கம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருக்க, மக்கள் மேலும் மேலும் தங்கத்தை வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்கம் விலை என்றைக்கு அபாரமாக உயர்கிறதோ, அன்றைக்கெல்லாம் தங்க நகைக் கடைகளில் அதிகமான கூட்டத்தையே பார்க்க முடிகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, மக்கள் தங்களிடம் இருக்கும் நகையை வங்கிகள், வங்கி அல்லாத நிறுவனங்களில் அடமானம் வைத்து பணம் பெறுவதும் ஏகத்துக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தை அடமானமாக வைத்துப் பணம் பெறுவது 122% அதிகரித்திருக்கிறது.

தங்க நகை அடமானக் கடன்
தங்க நகை அடமானக் கடன்

23-ல் 95,000 கோடி… 25-ல்….

கடந்த 2023-ல் வங்கிகளில் தங்கத்தை அடமானமாக வைத்துப் பெற்ற கடன் தொகை ரூ.95,344 கோடியாக இருந்தது. இது 2024-ல் மார்ச்சில் ரூ.1,02,562 கோடியாக உயர்ந்தது. ஆனால், அதே ஆண்டில் ஜூலையில் ரூ.1,32,535 கோடியாக உயர்ந்தது. இதுவே 2025 மார்ச்சில் ரூ.2,08,735 கோடியாகவும், 2025 ஜூலையில் ரூ.2,94,166 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

வட்டி விகிதம்

ஏன் இவ்வளவு அடமானக் கடன்…?

தங்க நகை அடமானக் கடனை மக்கள் இவ்வளவு தூரம் வாங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதல் காரணம், மிகக் குறைந்த விலையில் வாங்கிய தங்கத்தை அடமானமாக வைத்துப் பெரும் பணத்தைப் பெற பலரும் நினைக்கிறார்கள். நம்முடைய மக்கள் தங்கத்தை ஒரு சொத்தாகவே பாவிக்கின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு 1000 ரூபாய் தந்து வாங்கிய தங்கத்தை அடமானமாக வைத்து ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை கடன் பெறுகிறார்கள். இந்த அளவுக்கு அதிகமான கடனைப் பெற்றுத் தரும் சொத்து வேறு எதுவும் இருக்க முடியாது என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

இரண்டாவது காரணம், குறைந்த வட்டி. இன்றைக்கு பர்சனல் லோன், வீட்டுக்கடன், கார் கடன் என எல்லாக் கடனுக்கான வட்டி விகிதங்களைத் தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, குறைவு. தவிர, அடமானம் வைத்துப் பணம் பெறுவதற்கான வழிமுறையும் வெகு சுலபமானது. மேலும், வங்கிகளும் தங்க நகையைப் பெற்று, கடன் தருவதில் ரிஸ்க் குறைவு என்று நினைக்கிறது.  

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு; ரியல் எஸ்டேட் பம்பர் லாபம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு; ரியல் எஸ்டேட் பம்பர் லாபம்!

பணத்தை என்ன செய்கிறார்கள்?

தங்கத்தை அடமானமாகப் பெறும் பணத்தை வைத்து மக்கள் என்ன செய்கிறார்கள் என்கிற கேள்விக்குப் பலரும் பல விதமான பதிலைச் சொல்கிறார்கள். பெரும்பாலான மக்கள் தங்கத்தை அடமானமாக வைத்துப் பெறும் பணத்தை வைத்து, புதிதாக தங்கத்தை வாங்குகிறார்கள். இதன் மூலம் தங்கத்தில் மேலும் லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.

அடுத்து, வீடு வாங்குவதற்கான முன்பணத்தைக் கொடுப்பதற்கு தங்கத்தை அடமானமாக வைக்கிறார்கள். இன்னும் சிலர், கார் வாங்கவும் இந்த அடமானக் கடனைப் பயன்படுத்துகிறார்கள்.

உஷார், உஷார்!

தங்கம் விலை சில மாதங்களுக்கு முன்பு சில நாள்களில் 10 சதவிகிதத்திற்கு மேல் விழுந்தது. அது போல, இனி நடந்தால் என்ன செய்வது என்கிற விஷயத்தில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சுற்றுலா, ஓய்வுக் காலம்... உங்களின் எல்லா இலக்குகளையும் அடையத் திட்டமிட்டு பணம் சேர்க்கும் ஈஸி வழி!

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல விதமான இலக்குகள் இருக்கவே செய்கின்றன. ‘மகளை லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் படிக்க வைக்க வேண்டும்’, ‘அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பல நாடுகளுக்குச் சென்று வரவேண்டும்’... மேலும் பார்க்க

Personal Finance: உலகின் எட்டாவது அதிசயம் தெரியுமா? 'லாபம்' நடத்தும் இலவச ஆன்லைன் மீட்டிங்!

இந்த உலகில் ஏழு அதிசயங்கள் இருப்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், எட்டாவது அதிசயம் என்று இருக்கிறது. இந்த அதிசயத்தை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். இந்த அதிசயத்தைப் பற்றி நாம் தெ... மேலும் பார்க்க

ETF: இக்விட்டி இன்டெக்ஸ் இ.டி.எஃப் நல்ல லாபம் தருமா? | Share Market

முதலீடுகளில் ஒரு வகை இ.டி.எஃப். இதில் முதலீடு செய்யலாமா... லாபம் கிடைக்குமா போன்ற கேள்விகள் இருக்கிறதா? அதற்கான பதில்களை வழங்குகிறார் Aionion Group-ன் இயக்குநர் V. K. ஷேக் அப்துல்லா.ஒருவர் ஏன் இ.டி.எஃ... மேலும் பார்க்க

தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்

தங்கத்தைப் போலவே, வெள்ளியின் விலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால், தங்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாம் வெள்ளிக்கு வழங்குவதில்லை. இதற்கு தங்கத்தின் மதிப்பு, தோற்றம், பாரம்... மேலும் பார்க்க

Retirement: ரிட்டைர்மென்ட்க்குப் பிறகும் மாதம் சம்பளம் வேணுமா? - 'லாபம்' நடத்தும் ஆன்லைன் வழிகாட்டல்

60 வயசுக்கு அப்புறம் பென்ஷன் இல்லாம எப்படி வாழுறது? இந்தக் கேள்வி உங்க நிம்மதியைப்பறிக்குதா?கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நீங்க 30 வருஷத்துக்கு மேல வேலை செஞ்சு, அப்புறம் 25 வருஷத்துக்கு மேல ஓய்வுக்காலத்... மேலும் பார்க்க

ITR Filing: வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசி தேதி இன்னும் தள்ளிப்போகிறதா? காரணம் என்ன?

இந்த ஆண்டு புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது... ஐ.டி.ஆர் போர்ட்டல் அப்டேட் செய்யப்பட்டது. இதனால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் கடைசி தேதி செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்ப... மேலும் பார்க்க