'GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்' - நிதியமைச்சர் நிர்மலா சீதா...
சுற்றுலா, ஓய்வுக் காலம்... உங்களின் எல்லா இலக்குகளையும் அடையத் திட்டமிட்டு பணம் சேர்க்கும் ஈஸி வழி!
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல விதமான இலக்குகள் இருக்கவே செய்கின்றன. ‘மகளை லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் படிக்க வைக்க வேண்டும்’, ‘அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பல நாடுகளுக்குச் சென்று வரவேண்டும்’, ‘ஒரு பி.எம்.டபிள்யூ காரை வாங்க வேண்டும்’, ‘ஓய்வுக் காலத்தில் ஒரு குறையும் இல்லாமல் ஹாயாக இருக்க வேண்டும்’…
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இலக்குகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள்… இந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிற அளவுக்கான பணத்தை நமக்குச் சேர்க்கத் தெரிய வேண்டும். அப்போதுதான் அந்த ஆசைகளைக் குறை இல்லாமல் நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

சிலர், கல்விக் கடன் வாங்கி, மகனை அமெரிக்காவில் படிக்க வைக்கிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றாலும், வாங்கிய கடனை அசலுடன் முதலையும் சேர்த்துக் கட்டும்போது அவர்கள் அனுபவிக்கும் வேதனை என்பது கொஞ்சம் நஞ்சமல்ல.
ஒரு காரை வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு, இ.எம்.ஐ-யில் அதை வாங்கவும் செய்துவிடுகிறார்கள். ஆனால், கார் வாங்கிய பிறகு இ.எம்.ஐ பணத்தைக் கட்டும்போது, பல அத்தியாவசியமான செலவுகளைத் தவிர்க்க நினைக்கும்போது, ‘ஏன் தான், இந்த கார் வாங்கினோமோ’ என்று கவலைப்படுபவர்கள் பலர்.
நம்முடைய இலக்குகள் எவையாக இருந்தாலும் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள நாம் திட்டமிட வேண்டும். இந்தத் திட்டமிடுதலை எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றி வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று ‘லாபம்’ நடத்தும் கூட்டத்தில் விளக்கமாகப் பேசவிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த நிதி நிபுணர் கார்த்திக் சங்கரன்.

நம்முடைய எதிர்கால இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள நாம் எப்படி திட்டமிட்டுச் செயல்பட வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் தெளிவாகத் தெரிந்துகொண்டு, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நம்மால் செல்ல முடியும்.
நீங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெற விரும்பினால், https://forms.gle/ZKGzyH88eA3sweTo7 இந்த லிங்க்கினை சொடுக்கி, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். இந்த லிங்க்கினைச் சொடுக்கி, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மட்டும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு லிங்க்கானது மெயிலில் அனுப்பப்படும்.
நீங்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெறலாமே!