திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் கடந்த ஆக. 31 நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின், நிலப்பரப்புக்கு கீழ் 8 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குணான் மாகாணத்தில் சுமார் 8,000-க்கும் அதிகமான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது கிழக்கு ஆப்கானிஸ்தானில் (நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தில் உயிர் பலிகள் ஏதும் புதிதாக ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில், குணார் மாகாணத்தில் மட்டும் இதுவரை 1,411 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,124 பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தலிபான் அரசு செய்தித்தொடர்பாளர் ஷபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் சந்தித்த மிகப்பெரிய பேரிடர் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அண்டை மாகாணமான நாங்கர்ஹாரில் 12க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கன் நிலநடுக்கம் வெளியுலகுக்குத் தெரிய தாமதம் ஆனது ஏன்? துயரக் கதை!