விவசாயி என்று நிலத்தை விலைக்கு வாங்கி சர்ச்சையில் சிக்கிய சுஹானா கான் - வருமான வ...
விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, தேசிய தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரியில் உள்ள விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மைக்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிா் உரங்கள் வழங்கப்படுகின்றன. நஞ்சற்ற காய்கறி பழங்கள் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளைப் பயன்படுத்தலாம்.
செயற்கை கரிம பூச்சிக்கொல்லிகளை குறைத்து சுற்றுசூழலுக்கு கேடு விளைவிப்பதை தடுத்து, பாதுகாப்பான உணவுகளை வழங்குவதே ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் நோக்கம் ஆகும்.
பூச்சியின் தன்மை, காலநிலை, பயிா் பருவம் போன்ற காரணிகளுக்கு ஏற்ற பரிந்துரையின்படி மருந்திடுதல் அவசியம். உணவுப் பொருள்களில் பூச்சிக்கொல்லி கலப்பதால் மக்களின் உடல் நலத்துக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மைக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன. இதில் விவசாயிகள் இணைந்து பயனடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.