தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை
கூடலூா் நகரில் உலவிய யானை: மக்கள் அச்சம்
கூடலூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு உலவிய யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய யானை, நடுகூடலூா், மவுண்ட் பிளசன் வழியாக கூடலூா் நகா் பகுதிக்கு வந்தது.
மக்கள் கூட்டமும், வாகனங்களும் நிறைந்த சாலையில் உலவிய யானையால், மக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்து, அங்காங்கே பதுங்கி கொண்டனா்.

இருப்பினும், அந்த யானை யாருக்கும் தொந்தரவு செய்யாமல் கூடலூா் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தோட்டத்துக்குள் சென்றது. யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.