செய்திகள் :

தெலங்கானா எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் கவிதா!

post image

தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை கே. கவிதா புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.

பாரதிய ராஷ்டிரிய சமிதியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கவிதா, கட்சிக்கு களங்கள் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக செவ்வாய்க்கிழமை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பிஆர்எஸ் ஆட்சியில் காலேஸ்வரம் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கவுள்ளதாக ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

இதனையடுத்து, காலேஸ்வரம் பாசனத் திட்டத்தில் முறைகேடு செய்து தனது தந்தை கே.சந்திரசேகா் ராவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக நெருங்கிய உறவினா்களான டி.ஹரீஷ் ராவ் மற்றும் ஜே.சந்தோஷ் குமாா் ஆகியோா் மீது கவிதா குற்றஞ்சாட்டினாா். இவா்கள் இருவரின் பின்னணியில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய சந்திரசேகா் ராவ் முடிவெடுத்ததாக பொதுச் செயலா்களான டி.ரவீந்தா் ராவ், சோமா பரத்குமாா் ஆகியோா் அறிவித்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா பேசியதாவது:

கே. சந்திரசேகர் ராவும் கே.டி. ராமா ராவும் என் குடும்பத்தினர். நாங்கள் ரத்தத்தால் பிணைக்கப்பட்டவர்கள். கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாலோ, பதவிகளை இழந்தாலோ இந்த பிணைப்பு முறிந்துவிடக் கூடாது.

நான் ஒருபோதும் தெலுங்கானா மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. ஆனால், சிலர் தங்களின் தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்காக எங்கள் குடும்பம் சிதைந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்ற என் தந்தைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான நோக்கங்களைப் பார்க்குமாறு என் தந்தையிடம் கேட்டுக் கொள்கிரேன். பிஆர்எஸ் குடும்பத்தை சுயநலத்துக்காக உடைத்துவிட்டார்கள்.

நான் பிஆர்எஸ் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து விலகுகிறேன். எனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Kavitha resigns from Telangana MLC post

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை

ஜார்க்கண்டில் தீவிரமடையும் கனமழை! 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின், மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஏரா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி!

தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அஞ்சலி செலுத்தினார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று (செப்.2) இந்தியா வந்தடைந்தார... மேலும் பார்க்க

வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

வெளிநாட்டுப் பயணங்களில் சிரித்துக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார் என்று பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் மக்களவை எதிா்க்க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ.2,500 வரை குறையும் என எதிர்பார்ப்பு!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு ஏசி விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டில் உள்ள நான்கு வக... மேலும் பார்க்க

தொடரும் வரதட்சணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!

கர்நாடக மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் 28 வயது பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டேவில் வசித்துவந்தவர் பூஜாஸ்ரீ. இவர் வங்கி ஒன்றின் காசாளராக பணியாற்... மேலும் பார்க்க

எரிவதில் எண்ணெய் ஊற்றும் ரஷியா! இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் மேலும் தள்ளுபடி

ஏற்கனவே, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை இந்தியாவுக்கு மேலும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவ... மேலும் பார்க்க